Wednesday, March 19, 2008

ஈபில் கோபுரம்


அலெக்சாண்டர் குஸ்தவ் ஈஃபில் என்னும் கட்டடக்கலை நிபுணர், தம் பெயர் நிலைத்திருக்கும் வண்ணம் ஒரு கோபுரம் நிறுவினார். கலைவண்ணம் மிகுந்த அக்கோபுரந்தான் ஈஃபில் டவர்.பிரெஞ்சு நாட்டின் தலைநகர், பாரிஸ் அந்நகருக்கு அருகே சாமப் த மார்ஸ் என்னுமிடமுள்ளது. அங்குதான் விண்ணை முட்டிக்கொண்டு கம்பீரமாய் நிற்கிறது இந்தக் கோபுரம்.இக் கோபுரத்தின் உயரம் 984 சதுர அடி (300 மீட்டர்கள்), அடித்தளம் 530 சதுரஅடிகள் (30 சதுர மீட்டர்கள்). வெறும் இரும்பு, உருக்கு ஆகியவற்றால் உருவானது, இந்தப் பிரமாண்டமான கோபுரம்.இக் கோபுரம் 1889ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது 30 அடி கனமுள்ள இரும்புச் சட்டங்களும், பலகைகளும் கொண்டு கட்டப்பட்டது. இதற்குச் செலவான தொகை ஒரு மில்லியன் டொலருக்கு மேல்! அதுவும் அந்தக் காலத்தில்! இந்தத் தொகையைச் சில வருடங்களிலேயே சம்பாதித்துவிட்டது, இந்த ஈஃபில் டவர்.

No comments: