Monday, March 10, 2008

சூரியனின் தோற்றப் பயணமும் புவியின் சுழற்சியும் சுற்றுகையும்.


ஞாயிற்றுத் தொகுதி
சூரியனும் அதனைச் சுற்றிப் பயணம் செய்யும் ஏனைய கோள்களும் ஞாயிற்றுத் தொகுதி எனப்படும். ஞாயிற்றுத் தொகுதியில் அடங்கும் கோள்கள்.
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்ரியூன்
9. புளூட்டோ
தோற்ற அசைவு
பஸ் வண்டியில் பயணம் செய்யும்போது எதிரே நிற்கின்ற மின் கம்பங்கள் எம்மை நோக்கி ஓடிவருவது போல்இருக்கும். இது தோற்ற அசைவு எனப்படும்.
இவ்வாறே நாள்தோறும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதே தோற்ற அசைவு ஆகும். இங்கு புவி தனது சுயாதீனமான அச்சுப்பற்றி மேற்கிலிருந்து கிழக்காக சுழலுவதன் காரணமாக சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்வது போல் தோன்றுன்கிறது. இதுவே சூரியனின் தோற்ற அசைவு எனப்படுகின்றது.
புவியின் சுழற்சி அச்சு:- புவியின் சுழற்சி நடைபெறுவதாகக் கருதப்படும்
கற்பனை அச்சு சுழற்சி அச்சு எனப்படும்.
புவியின் சுற்றுகை:- புவி சூரியனைச் சுற்றிவர 365 ¼ நாட்கள் எடுக்கும். இது புவிச்சற்றுகை எனப்படும்.
வட அரைக்கோளமும் தென் அரைக்கோளமும்
பூமி கற்பனை வட்டமொன்றினால் இரண்டு அரைக்கோளங்களாக பிரிக்கப்படும். இக்கற்பனை வட்ட மையத்தை நடுக்கோடு என்போம். பூமியின் மேல் அரைப்பாதியை வடஅரைக்கோளம் எனவும் கீழ் அரைப்பாதியை தென்னரைக்கோளம் எனவும் அழைப்பர். வட அரைக்கோளத்தின் முனைவு வடமுனைவு எனவும் தென் அரைக்கோளத்தின் முனைவு தென்முனைவு எனவும் அழைக்கப்படும்.
புவி தனது அச்சுப்பற்றி சுழன்றவாறு சூரியனைச் சுற்றி வரும் நீள்வட்ட ஒழுக்கு ஒரு தளத்தில் அமைந்திருக்கும். இத்தளம் பூமியின் மண்டலத்தலம் என்றும் கிரகண வளையம் என்றும் அழைக்கப்படும்.

No comments: